மலேசிய நீதிமன்றத்தில் கிம் கொலை தொடர்பாக இரண்டு பெண்கள் மீது குற்றச்சாட்டு பதிவு

வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கின் அண்ணன் கிம் ஜாங்-நம். இவர் கடந்த 13-ந்தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மர்மமான முறையில் திடீரென மரணம் அடைந்தார். விமான நிலையத்தில் அமர்ந்திருந்த அவரது முகத்தில் 2 பெண்கள் தடை செய்யப்பட்ட ‘வி எக்ஸ்’ என்ற கொடுமையான ரசாயன வி‌ஷப்பவுடரை வீசி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

_Malaysian-court-

இக்கொலை தொடர்பாக இந்தோனேசியா மற்றும் வியட்நாமை சேர்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் இருவரும்  கோலாலம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். முகத்தை கைகுட்டையால் மூடியபடி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரு பெண்களும் கோலாலம்பூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மலேசிய சட்டப்படி இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது

 

 

.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top