தமிழகத்தில் இன்று முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்கள் விற்கப்படாது!

கோகோ, பெப்சி போன்ற அந்நிய நிறுவன குளிர்பானங்களை இன்று மார்ச் 1 முதல் விற்பனை செய்வதில்லை என வணிகர்கள் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் மாணவர்கள், இளைஞர்கள் எழுச்சியுடன் போராடினர். அப்போது அந்நிய நாட்டு நிறுவனத்தின் குளிர்பானங்களான பெப்சி, கோகோ உள்ளிட்டவைகளை தடை செய்ய வலியுறுத்தப்பட்டது. மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழகத்தில் பெப்சி, கோகோ உள்ளிட்ட அந்நிய நிறுவன குளிர்பானங்கள் மார்ச் 1-ஆம் தேதி முதல் விற்பனை செய்வதில்லை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளையன் கூறுகையில், கோகோ, பெப்சி போன்ற அந்நிய நிறுவன குளிர்பானங்களை இன்று மார்ச் 1 முதல் விற்பனை செய்வதில்லை என்று கூறிய வெள்ளையன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்தார்.
இயற்கை வளங்களை அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு செயல்படுவதாகவும், அதை எதிர்த்து தான் நெடுவாசலில் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top