2002 குஜராத் கலவரம் நமக்கு ஒரு ஆறாத ரணம்;ஒரு மீள் பார்வை தொகுப்பு

 

 

padam-1

 

2002 ல் குஜராத்தில் நடந்த இஸ்லாமிய இனப்படுகொலையை மறந்திருக்க முடியாது பதினைந்து வருடங்கள் ஓடிவிட்டது அந்த நிகழ்வுகளை அவ்வளவு சீக்கிரமாக யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. குஜராத் கலவரம் நமக்கு ஒரு ஆறாத ரணம்

 

இந்த இனப்படுகொலையை அரசாங்கம் தனது முழு பங்களிப்புடன், ஆசிர்வாதத்துடனும் நடத்தியது எப்படி? எல்லாம் திட்டமிட்டபடி நிகழ்த்தப்பட்டது என்கிற உண்மையை இந்த உலகிற்கு அறிவித்தவர் தெகல்கா பத்திரிகையின் புலனாய்வு நிருபர் ஆஷிஷ் கேத்தன்..

 

பதினைந்து வருடம் கழித்து அதை நினைவு படுத்தவேண்டிய அரசியல் அவசியம் இப்போது ஏற்பட்டிருக்கிறது .மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்தில் நடக்கிற பலவீனமான அரசை பயன்படுத்தி தாம் அரசியல் ஆதாயம் அடையலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறது. ,நாசகார திட்டங்களை எல்லாம் தமிழகதிற்கு கொண்டு வருகிறது அதன்மூலம் ,இயற்கை வளங்களை கொள்ளை அடிக்க முயற்சிக்கிறது அதை எதிர்க்கும் மக்களை ,அரசியல் இயக்கங்களை  மக்கள் விரோத அமைப்புகள் என்பது , மிகவும் தைரியமாக நாட்டுக்காக தமிழகத்தை பலி கொடுப்பதில் எந்த தப்பும் இல்லை என்பது விவசாயிகள் கொத்துகொத்தாக இறந்தபோதும் கண்டுகொள்ளாமல் இருப்பது ,இயற்கை அழகான மேற்கு தொடர்ச்சி மலையை அழித்து பிரமாண்டமான சிவன் சிலையை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றும் ஈஷா யோக அமைப்பு அழைத்ததும் பாரத பிரதமரே மக்களின் எதிர்ப்பை மீறி தமிழகம் வருவது என்று பாஜக செய்யும் அவ்வொரு செயலும் அடுத்த ஒரு இனப்படுகொலைக்கு தமிழர்களை தயார்செய்கிறார்களோ என்கிற பயம் கலந்த அச்சம் ஏற்படுகிறது

 

ஆகையால்தான் தெகல்கா பத்திரிகையின் புலனாய்வு நிருபர் ஆஷிஷ் கேத்தன். கொலைகாரரிடம்  எடுத்த பேட்டியை உங்களிடம் நினைவு படுத்தவே மீண்டும் கொண்டு வருகிறோம்

 

இந்த கொலைகளை செய்த படு பாதகன் ஹரேஷ் பட்டுக்குப் பின்னர் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி கொடுத்து அழகு பார்த்தவரத்தான்  நரேந்திர மோடி என்பதையும் உங்களுக்கு நினைவு படுத்துகிறோம்

 

மற்றும், ‘’இந்த இனப்படுகொலையின்போது குஜராத் காவல்துறையினர்  எங்களுக்காக வேலை செய்யவும் பாதுகாப்பு அளிக்கவும் பணிக்கப்பட்டிருன்தனர் அதற்கான உத்தரவை நரேந்திர மோடி சிறப்பாக செய்திருந்தார்’’ என்கிறார் கொலையாளிகளில் ஒருவரான பாபு பஜ்ரங்கி

 

இப்போது நினைத்து பாருங்கள் மாணவர்களே ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நம்மிடம் தினசரி காபி, டீ வாங்கி குடித்த காவல்துறையினர் கடைசியில் மோடி சொல்கேட்டும் பன்னீர் சொல்கேட்டும் நம்மை எப்படி தாக்கினர்! காவல்துறையினரை கொலைகாரர்களாக மாற்றும் வித்தை மோடிக்கு நன்றாக தெரியும்

 

kaval

குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் ஆசிர்வாதத்தோடும், உதவியோடும் தான் மதக் கலவரத்தை நடத்தியதாக பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர்

 

கோத்ரா எம்எல்ஏவான பட் கூறுகையில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பாஜக பிரமுகர்கள், பஜ்ரங் தள், விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் நான் உங்களுக்கு 3 நாட்கள் நேரம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் (வன்முறை, கொலை, தாக்குதல்) செய்து கொள்ளுங்கள். ஆனால், 3 நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும் என்றார்.
பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி கூறுகையில், ‘’நான் ஒரு கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன். அதிலிருந்த சிசுவை எடுத்து வெளியே எரிந்து வெட்டினேன்’’ என்று கூறியுள்ளார்.

மதன் சாவல் என்ற பாஜக தொண்டர் கூறுகையில், ‘’முன்னாள் காங்கிரஸ் எம்பி ஜாப்ரி தனது பகுதி முஸ்லீம்களை காப்பாற்ற முயன்றார். தனது வீட்டில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தார். இதையடுத்து நாங்கள் வாள்களுடன் அவரது வீட்டை முற்றுகையிட்டோம். அப்போது கை நிறைய பணத்தை அள்ளிக் கொண்டு வந்த ஜாப்ரி இதை வைத்துக் கொண்டு அனைவரையும் விட்டுவிடுமாறு கூறினார்.

நாங்கள் சரி என்றோம். பணத்தைக் கொடுத்த அவர் கதவைத் திறந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்து அவரைப் பிடித்தோம். இருவர் கையை பிடித்துக் கொள்ள நான் அவரது கைகளை வெட்டினேன் பின்னர் அவரது மர்ம உறுப்பை வெட்டி எரிந்தோம். பின்னர் அவரை துண்டு துண்டாக்கி எரித்துவிட்டோம். அவர் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டோம்’’ என்று கூறியுள்ளார்.
 

 

Gujarat-Riot

 

இன்னொரு தொண்டர் கூறுகையில், நரேந்திர மோடியால் தான் நான் சிறையில் இருந்து வெளியே வந்தேன். அவர் நீதிபதிகளை இடமாற்றம் செய்து தனக்கு வேண்டியவர்களை நியமித்ததால் தப்பித்தேன் என்றார்.

சுரேஷ் ரிச்சர்ட் என்பவர் கூறுகையில், போலீஸார் எங்களை அழைத்து சில இடங்களை சுட்டிக் காட்டி இங்கு முஸ்லீம்கள் சிலர் ஒளிந்துள்ளனர். அவர்களை விடாதீர்கள் என்று எங்களுக்கு வழி காட்டினர். நாங்கள் அந்த இடத்திற்குச் சென்று வெளியிலிருந்து கதவுகளை மூடி உள்ளேயே வைத்து அவர்களை எரித்துக் கொன்றோம் என்று தெரிவித்துள்ளார்.

விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த ரமேஷ் தவே கூறுகையில், இதை நாங்கள் இப்போது செய்யவில்லை. கடந்த 20, 25 வருடங்களாகவே எங்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் (முஸ்லீம்கள்) கொன்று குவித்துள்ளோம் என்று கூறியுள்ளார் தவே.
குஜராத் கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நானாவதி ஷா கமிஷன் முன்பு ஆஜரான அரசு வக்கீல் அரவிந்த் பாண்ட்யா கூறுகையில்,

கலவரத்தில் ஈடுபட்டோருக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டன. முதல்வர் நரேந்திர மோடி உயர் காவல்துறை அதிகாரிகளை அழைத்து இந்துக்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளுமாறு வாய் மொழியாக உத்தரவிட்டார்.

கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு மோடி மிகவும் அப்செட் ஆக இருந்தார். அகமதாபாத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசத் தயாராக இருப்பதாக அவர் கூறி வந்தார். ஆனால் முதல்வர் பதவியில் இருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார்.

முஸ்லீம்களைக் கொன்ற தினத்தை ஆண்டுதோறும் இந்துக்கள் பெரிய அளவில் கொண்டாட வேண்டும். அதே சமயம் அவர்களைக் கொல்வதை விட நசுக்குவதுதான் மிகவும் சிறந்தது. இதன் மூலம் முஸ்லீம்கள் காலம் பூராவும் இந்துக்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள்.

முஸ்லீம்களைக் கொல்வதைப் போல அவர்கள் மீது பொருளாதார நெருக்கடியைத் திணிக்க வேண்டும் என்று கூறியுள்ள பாண்ட்யா இதை விட பயங்கரமாக, இந்த சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி நானாவதி ஷா கமிஷனையே விலைக்கு வாங்கிவிட்டன பாஜக மற்றும் அதன் கூட்டு அமைப்புகள் என்றும் தெரிவித்துள்ளார்.
 

சேவற்கொடியோன்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top