ஏழு முஸ்லிம் நாட்டு பயணிகளுக்கு தடை; நீதிமன்றத்தை மீறி அதிபர் ட்ரம்ப் புதிய உத்தரவு பிறப்பிப்பு

 

KEENE, NH - SEPTEMBER 30: Republican Presidential candidate Donald Trump speaks during a town hall event at Keene High School September 30, 2015 in Keene, New Hampshire. Trump has seen his lead in the polls slip but still leads in New Hampshire. (Photo by Darren McCollester/Getty Images)

 

சிரியா, ஈரான், இராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதிகள், பயணிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து கடந்த ஜனவரியில் அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்தார். இந்த தடையை சியாட்டிலில் உள்ள மாவட்ட நீதிமன்றம் நீக்கியுள்ளது. இதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் 7 நாடுகளின் முஸ்லிம் அகதிகள், பயணிகளுக்கு தடை விதிக்க வகை செய்யும் புதிய உத்தரவை அதிபர் ட்ரம்ப் நாளை பிறப்பிக்க உள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் நிருபர்களிடம் கூறியபோது, புதிய தடை உத்தரவு புதன்கிழமை பிறப்பிக்கப்படும். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அவ்வளவு நேர்த்தியாக புதிய தடையாணை பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதிபர் ட்ரம்பின் தடை உத்தரவை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்கர் விருது விழாவிலும் ட்ரம்பின் தடை உத்தரவை ஹாலிவுட் நடிகர், நடிகைகள் கடுமையாக விமர்சித்தனர். இதனிடையே புதிய உத்தரவை எதிர்த்தும் நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்று சமூக ஆர்வலர்கள் அறிவித்துள்ளனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top