உத்தரப் பிரதேசத்தில் 5-ம் கட்ட தேர்தல்: 51 தொகுதியில் 57 சதவீத வாக்குப் பதிவு

 

up_election_

 

உ.பி.யில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறி விக்கப்பட்டது. இதன்படி, 4 கட்ட தேர்தல் ஏற்கெனவே முடிந்து விட்டது. பல்ராம்பூர், பைசாபாத், அம்பேத்கர் நகர், பரெய்க், அமேதி, சுல்தான்பூர் உட்பட 11 மாவட்டங் களுக்குட்பட்ட 51 தொகுதிகளில் நேற்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

பலத்த பாதுகாப்புக்கு நடுவே 5-ம் கட்டமாக, 51 தொகுதிகளில் நேற்று நடைபெற்ற தேர்தலில் 57 சதவீத வாக்குகள் பதிவானது.

இந்தத் தேர்தல் அமைதியாக நடைபெற்றதாகவும் இதில் 57.36 சதவீத வாக்குகள் பதிவானதா கவும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி டி.வெங்கடேஷ் தெரி வித்துள்ளார். கடந்த 2012 பேரவைத் தேர்தலில் இப்பகுதியில் 57.09 சதவீத வாக்குகள் பதிவாயின.

பைசாபாத் மாவட்டத்துக்குட்பட்ட அயோத்தி தொகுதியும் மிகவும் முக்கியத் துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ராமர் கோயில் விவகாரம் தொடங்கியதிலிருந்து பாஜகவின் கோட்டையாக இருந்த இந்தத் தொகுதி, 2012 தேர்தலில் சமாஜ்வதி வசமானது. இதை மீண்டும் கைப்பற்ற பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

 

அமேதி பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் மக்களவை தொகுதி. சர்ச்சைக்குரிய அமைச்சர் காயத்ரி பிரசாத் பிரஜாபதி ஆளும் சமாஜ்வாதி சார்பில் போட்டியிடுகிறார். இவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு நிலுவையில் உள்ளது.

இவரை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் (சமாஜ்வாதியுடன் கூட்டணியில் இருந்தபோதும்) அமிதா சிங்கும், பாஜக சார்பில் கரிமா சிங்கும் போட்டியிடு கின்றனர். மேலும் அமிதா சிங்கும் கரிமா சிங்கும் அமேதி மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த சஞ்சய் சிங்கின் மனைவிகள் என்பதால் இந்த தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

5-ம் கட்ட தேர்தல் அட்டவணை யில் ஆலாபூர் தொகுதியும் இடம் பெற்றிருந்தது. ஆனால், அந்த தொகுதியின் சமாஜ்வாதி வேட்பாளர் சந்திரசேகர் கனவுஜியா மரணம் அடைந்ததால் மார்ச் 9-ம் தேதிக்கு வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக வரும் மார்ச் 4, 8 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மார்ச் 11-ம் தேதி வாக்குகள் எண் ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top