பாஜக விற்கு மே பதினேழு இயக்கம் முகநூலில் கொடுத்த பதிலடி

 

may 17

 

பிஜேபிகாரர்கள் ஏன் தொடர்ச்சியாக மே 17 இயக்கத்தை விமர்சிக்கிறார்கள்? இன்னும் அதிகமாக தீவிரவாதிகளென்று முகநூலில் பாஜக தலைமையில் இருப்பவர்களே எழுதுகிறார்களே? என்ற கேள்விக்கு  மே பதினேழு இயக்கத்தை சேர்ந்த தோழர்கள் முகநூலில் அளித்த பதில்

 

அதாவது மோடி தலைமையிலான பிஜேபி அரசு பதவியேற்றதிலிருந்து அதன் மக்கள் விரோத கொள்கைகளை தொடர்ச்சியாக மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி வருகிறோம். குறிப்பாக

ரேசன் கடைகளை மூடுதல்:

நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் அனைத்து பொருட்களும் குறைவான விலையில் கிடைக்க வேண்டுமென்று ஆரம்பிக்கப்பட்டது தான் ரேசன் கடைகள். அப்படிப்பட்ட ரேசன் கடைகளை மூடிவிட்டு மக்கள் அனைவரும் வெளி மார்க்கெட்டில் பணம் அதிகம் கொடுத்து பொருட்கள் வாங்கி முதலாளிகளுக்கு லாபம் சேர்க்கவேண்டும் என்பதற்காக உலக வர்த்தக கழகம் (WTO) என்ற அமைப்பு பல்வேறு வழிகளில் மூன்றாம் உலக நாடுகளை குறிப்பாக இந்தியாவை கேட்டுக்கொண்டது. இந்த மோசமான திட்டத்தில் தான் மோடி தலைமையிலான பிஜேபி அரசு பதவி ஏற்றவுடன் அதன் அமைச்சரவையில் இருந்த நிர்மலா சீதாரமன் ஏப்ரல் 22’2016ல் கையெழுத்திட்டார். இதன்படி ரேஷன் கடைகளை முடுவதற்கும்
விவசாய மானியங்களை ரத்து செய்வதற்கும் இந்தியா ஓப்புக்கொண்டதை முதன்முதலாக மே 17 இயக்கம் அம்பல்ப்படுத்தியது. இது பெருவாரியான மக்களை சென்றடைந்தவுடன் பதறிப்போய் அவசர அவசரமாக இதனை மறுத்து பொய்யாக ஒரு அறிக்கையினை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதற்கும் மறுப்பு அறிக்கையினை ஆதாரத்தோடு மே 17 இயக்கம் வெளியிட்டது. இதனிடையில் 04.05.2016 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பையும் 07.05.2016 அன்று மக்கள் திரள் போராட்டத்தை நடத்தி மோடி அரசின் இந்த ரேசன் கடை மூடும் நடவடிக்கையை அம்பலப்படுத்தினோம்.

இன்று என்ன நடக்கிறது கடந்த மூன்று மாதங்களாக தமிழகமெங்கும் பருப்பும் பாமாயிலும் ரேசன் கடைகளில் கிடைக்கவில்லை. இப்போது தமிழக அரசு வழங்கி வந்த 20கிலோ அரிசிக்கு பதிலாக 15கிலோ அரசியும் 5கிலோ கோதுமையும் கொடுக்கிறாரகள்.ஏனென்றால் அரசி இருப்பு வைக்ககூடாதென்பதற்காக மோடி அரசு உணவு பாதுகாப்பு மசோதா கொண்டுவந்துவிட்டது. அடுத்து ஆதார் அட்டை இல்லாவதர்களுக்கு ரேசன் பொருள் கிடையாதென்றூ அறிவித்துவிட்டது. இப்படி படிப்படியாக ரேசன்கடைகளை மூட மோடி அரசு வேலைகளை தொடங்கிவிட்டது. இதனை தான் மே 17 இயக்கம் அன்றே சொன்னது.

 

rasan-1

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு தடை:

கருப்பு பணத்தை ஒழிக்கிறோமென்று சொல்லி நவம்பர் 08’2016 அன்று நள்ளிரவிலிருந்து 1000 மற்றும் 500ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து மக்களை எல்லாம் பெரும் தெருவில் நிற்கவைத்தது மோடி தலைமையிலான பிஜேபி அரசு.மோடியின் இந்த நடவடிக்கையினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் இதுகுறித்து பேச தயங்கினார்கள் காரணம் பிஜேபி இதனை கறுப்பு பண ஒழிப்பு என்று சொல்லி கொண்டுவந்தது தான் . ஒருவேளை நாம் எதிர்த்தால் நம்மை கறுப்பு பணத்திற்கு ஆதரவானவர்கள் என்றுசொல்லி விடுவார்களோ என்ற தயக்கமிருந்தது. இந்த சூழ்நிலையில் இந்த ’பணமதிப்பு ஒழிப்பு’ நடவடிக்கை என்பது கறுப்பு பண ஒழிப்பு அல்ல இது ஏழை எளிய மக்களை வரி வரம்புக்குள் கொண்டுவந்து அந்த பணத்தைக்கொண்டு பெரிய பெரிய முதலாளின் கடனை தள்ளுபடி செய்து வங்கிகளை காப்பாற்றும் நடவடிக்கையே இந்த திட்டமென்று முதன் முதலாக அறிவித்து அதற்கான பிரச்சாரத்தையும் போராட்டத்தை முன்னெடுத்தது மே 17 இயகக்ம். மேலும் பிஜேபி தலைவரான அமித் ஷா இந்த திட்டத்தை பயன்படுத்தி எவ்வளவு ஊழல் செய்தார் என்பதையும் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியது.

money

 

ஈழத்தமிழர் விரோத கொள்கைகள்:

இனப்படுகொலைக்கு ஆளான ஈழத்தமிழர்கள் தனக்கான நீதிக்காக போராடிக்கொண்டு இருக்கும்போது அருகிலுள்ள இந்திய அரசும் அதனை ஆளுகிற மோடியும் இனப்படுகொலையாளர்களுடன் கொஞ்சி குழாவுவதும், இனப்படுகொலை நாட்டிற்கு சென்று அந்த நாட்டை ஜனநாயக நாடு என்று புகழ்வதும். பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களை எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் இனப்படுகொலையாளர்களான சிங்கள பொளத்த பேரினவாதிகளோடு இணைந்து வாழுங்கள் என்று தனது வெளிவிவகார அதிகாரியான ஜெய்சங்கரைக்கொண்டு பேசவைப்பதும், தனது அதிகாரத்தை தெற்காசியாவில் நிலைநாட்ட ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்தை சிதைப்பதையும் தொடர்ந்து செய்துவருகிற இந்திய அரசையும் அதனை ஆளுகிற மோடி அரசையும் மே 17 இயக்கம் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து கேள்விகேட்கிறது அம்பலப்படுத்துகிறது.

candle

 

இதுபோக தமிழகத்தின் நெற்களச்சியமான காவிரிடெல்டாவில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை குஜராத்தி மார்வாடிகளுக்கு தாரை வார்த்து தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களை பாலைவனமாக்க முயற்சித்ததையும், தொன்மையான மொழியான தமிழை அழித்து இந்தியை புகுந்த நினைப்பதையும், தமிழரின் பண்பாடான ஜல்லிகட்டை தடுத்தி நிறுத்து தமிழ்தேசிய அடையாளத்தை அழிக்க நினைப்பதையும் இன்னும் மோடி தலைமையிலான பிஜேபி அரசு செய்ய துணியும் அனைத்தையும் தொடர்ச்சியாக மக்கள் மன்றத்தில் மே 17 இயக்கம் அம்பலப்படுத்துவதால். வட இந்தியாவில் பாசிச பிஜேபி பயன்படுத்தும் தீவிரவாத பூச்சாண்டியை காட்டி மே 17 இயக்கத்தை மக்களிடத்திலிருந்து தனிமை படுத்திவிடலாமென்று நினைக்கிறது பாசிச பிஜேபி அரசு.

பிஜேபியின் இந்த பூச்சாண்டிகள் ஒருநாளும் தமிழகத்தில் எடுபடாது. ஏனென்றால் இது வடநாடுமில்லை நாங்கள் வடவனுமில்லை. இது அயோத்திதாசர் மறைமலை அடிகள் பெரியார் பெருஞ்சித்ரனார் உள்ளிட்ட பல தலைவர்களால் பண்படுத்தப்பட்ட மண்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top