கோவை ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டி பொதுமக்கள் ஆர்பாட்டம்

 

jaggi modi shiva

 

கோவை ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டு இருந்த 112 அடி உயர ஆதியோகி சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைக்க வந்தார்

அவருக்கு கோவை மக்கள் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தார்கள்

 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி தமிழக பாராளுமன்ற மற்றும் ராஜ்ய சபை உறுப்பினர்கள் பிரதமரை சந்திக்க கோரி இருமுறை முயற்சித்தும் அவர்களுக்கான நேரம் ஒதுக்கி தர மோடியால் முடியவில்லை. பிறகு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அப்போது முதல்வராக, பிரதமருக்கு அனுசரணையாக இருந்த பன்னீர்செல்வத்தை மட்டும் சந்தித்து விட்டு மற்ற உறுப்பினர்களை பாராமல் சென்றார், விவசாயிகள் கொத்துகொத்தாக செத்தபோதும் ஏன்னென்று பாராத நம் பாரத பிரதமர் ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டு இருந்த 112 அடி உயர ஆதியோகி சிலையை திறந்து வைக்க ஓடிவருகிறார்.

protest

கோவை ஈஷா யோகா மையம் ஜக்கிவாசுதேவ் மேற்கு தொடர்ச்சி மலையின்  காட்டு பகுதிகளை அழித்து, யானைகள் வரும் பாதையை அழித்து இந்த சிலையை நிறுவி அங்கு யோகா மையத்தை உருவாக்கி இருக்கிறார்.இது சட்டத்திற்கு புறம்பானது.அங்கு எழுப்பி இருக்கும் கட்டிடங்கள் முறையான அனுமதி பெறாமல் கட்டியவை.அது  குறித்து பூவுலகில் நண்பர்கள் அமைப்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.

சட்டத்திற்கு புறம்பான ஒரு நிகழ்சியில் நம் நாட்டு பிரதமர் கலந்து கொள்கிறார் என்றால் யாருக்கான பிரதமர் அவர்? என்கிற கேள்வி எழாமல் இல்லை. ஒரு சமூக விரோத செயல்பாட்டாளருக்கு பின்னல் பிரதமர் இருக்கிறார் என்று நாளை வரலாறு சொல்லும்.

 

இந்த சூழலில் கோவை வருகை தரும் மோடி அவர்களுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதைக் கண்டித்தும்,பவானியில் கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்காதைக் கண்டித்தும்,கர்நாடக மேகதாதுவில் 60 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட ரூ 5912/ செலவில காவிரியில் அணை கட்டுவதைக் கண்டித்தும் பொது மக்கள் மற்றும் பெரியாரிய இயக்கங்கள், விவசாயிகள் இயக்கங்கள்  கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.

500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top