பிரதமர் மோடிக்கு அகிலேஷ் சவால்! நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?

 

Akhilesh_3128363f

 

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் தீபாவளி பண்டிகையின்போது மின் விநியோகம் தடைபட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சுல்தான்பூர், மில்காபூரில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:

பிரதமர் மோடி அபாண்டமாக குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார். ரம்ஜானுக்கு மட்டுமல்ல, தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் தடையின்றி மின் விநியோகம் வழங்கினோம். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதத்துக்கு தயாராக உள்ளேன். அவர் என்னோடு விவாதத்துக்கு தயாரா?

அமிதாப் பச்சன் குஜராத் மாநில சுற்றுலாத் துறை விளம்பரங்களில் நடித்து வருகிறார். குஜராத்தின் பாஜக அரசை ஆதரிக்கும் விளம்பரங்களில் அவர் நடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top