தமிழகத்தை சேர்ந்த சந்திரசேகரன் டாடா குழுமத்தின் புதிய தலைவர்!

 

டாடா சன்ஸ் நிறுவனம், சர்வதேச அளவில் டாடா குழுமத்தின் துணை நிறுவனங்கள் மற்றும் வர்த்தக பணிகளை நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவராக கடந்த 2011ம் ஆண்டு முதல் சைரஸ் மிஸ்த்ரி (48 வயது) செயல்பட்டு வந்தார். இந்நிலையில் திடீரென அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

-Chandrasekaran-to-b

அவர் பதவி நீக்கம் குறித்து உரிய விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை. எனினும், சைரஸ் மிஸ்த்ரி லாபம் ஈட்டக்கூடிய வர்த்தகப் பணிகளில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும், இதனால் ரத்தன் டாடா போன்றோர் அதிருப்தி அடைந்தனர் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்தே, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன. சைரஸ் மிஸ்த்ரியை தொடர்ந்து, டாடா சன்ஸ் நிறுவனத்தின் இடைக்கால தலைவராக, ரத்தன் டாடா 4 மாதங்களுக்கு செயல்பட்டார்.  அதன்பிறகு புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டார்.

 

நடராஜன் சந்திரசேகரன் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். பாம்பே இல்லத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட சந்திரசேகரன், டாடா குழுமத்திற்கு தேவையான வளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். நடராஜன் சந்திரசேகரன் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் 1963-ல் பிறந்தார். திருச்சி ஆர்.இ.சி.பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றவர். நாட்டின் முன்னணி தொழிற் குழுமத்தின் தலைமை பொறுப்பில் அமரும் தமிழர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top