மீண்டும் இலங்கை அத்துமீறல்! நடுக்கடலில் தமிழக மீனவர்களின் வலைகளை பறித்து மீன்கள் கொள்ளை

 

 

Nets-of-the-fishermen-

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களின் வலைகளை பறித்து, அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும்  இலங்கை மீனவர்கள் கொள்ளை அடித்து  சென்றனர்.
நாகை மாவட்டம் நாகூர் கீழப்பட்டினச்சேரி ஆரியநாட்டுத்தெரு பகுதியை சேர்ந்த கோவிந்தன் (வயது 40). இவருக்கு சொந்தமான விசைப்படகில், அவரும், அதே பகுதியை சேர்ந்த 8 பேரும் கடந்த 11-ந் தேதி நாகை கடுவையாற்றில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இவர்கள் கடந்த 18-ந் தேதி இரவு வேளாங்கண்ணியில் இருந்து சுமார் 35 நாட்டிக்கல் கடல்மைல் தொலைவில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.


அங்கு 2 பெரிய விசைப்படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள், நாகை மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்கள் நாகை மீனவர்களின் விசைப்படகிற்கு வந்து பிடித்து வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள மீன்களை கொள்ளையடித்தும், ரூ.12 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகளையும் பறித்து சென்றனர். மேலும், சில மீனவர்களின் வலைகளை அறுத்து சேதப்படுத்தினர்.

மீன்கள் மற்றும் வலைகளை இலங்கை மீனவர்களிடம் பறிகொடுத்த நாகை மீனவர்கள் நேற்று அதிகாலை கரைக்கு திரும்பி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீன்வளத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் நாகை மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top