ஐநா வின் இந்த நடப்பு கூட்டத்தொடரிலாவது ‘இலங்கை’ சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்படுமா?

-United_Nations_

 

2012லிருந்து வருடந்தோறும் எது நடக்கிறதோ இல்லையோ ஈழ இனப்படுகொலை சம்பந்தமான ஐநா கூட்டம் தவறாமல் ஜெனிவாவில் நடக்கும். அதுபோல தான் இந்தமுறையும் 34வது கூட்டத்தொடர் வரும் 27ஆம் தேதி தொடங்க விருக்கிறது. வழக்கபோல தமிழர்கள் பிரச்சனையை தீர்க்கிறோமென்ற என்ற பெயரில் வல்லரசு நாடுகள் இலங்கையில் தங்களது நலனை முன்னிறுத்த முண்டியடிக்கும். இலங்கையோ தங்களது சிங்கள பொளத்த பேரினவாதத்தை காக்க காவடி தூக்கும். இந்தியாவோ இந்தியாவின் பாதுகாப்பே கேள்வி குறியானலும் தமிழனுக்கு ஒரு தீர்வும் கிடைத்து விடக்கூடாதென்று மும்முரமாக வேலைசெய்யும்.

photo-1

நாமோ ஒன்றரை லட்சம் மக்களையும் இனப்படுகொலைக்கு பலியாக கொடுத்துவிட்டு வானத்திலிருந்து தேவதூதன் யாராவது வரமாட்டார்களா? எம் மக்களின் விடிவுக்கு வழி ஏதும் பிறக்குமா? என்று தன்னை சுற்றி நடக்கும் எந்த சதிகளையும் பற்றி தெரியாமல் இருப்போம். இந்த காட்சிதான் கடந்த நான்காண்டுகளாக ஜெனிவாவில் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இந்த காட்சிகளுக்கு நடுவே உண்மையான தமிழ்ர்களுக்கான தீர்வு குறித்து பேசுபவர்களின் குரல் வலிமையற்றதாக மாற்றப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில் தான் மீண்டும் ஒரு கூட்டம் ஆரம்பிக்கவிருக்கிறது. இந்த கூட்டத்தொடரில் கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்காவால் முன்மொழியப்பட்டு இலங்கை அரசும் ஏற்றுக்கொண்ட 30வது கூட்டத்தின் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீதான மீளாய்வாக இந்த கூட்டம் நடக்கவிருக்கிறது. இந்த மீளாய்வு கூட்டம் 2016மார்ச் மாதமே நடத்திருக்கவேண்டும் ஆனால் இலங்கையில் நடந்த ஆட்சி மாற்றத்தை காரணம் காட்டி இனப்படுகொலை இலங்கை அரசும் அமெரிக்காவும் கேட்டுக்கொண்டதற்கிணைங்க ஐநா அவை தீர்மானத்தில் உள்ளதை நிறைவேற்ற கால அவகாசம் அளித்தது. இதனால் தான் ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போது நடக்கவிருக்கிறது.

photo-3

 

ஆனால் கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் ஒரு நல்லிணக்க செயலிலும் ஈடுபடாத இலங்கை அரசு இப்போது மேலும் ஒன்றரை வருடம் அவகாசத்தை ஐநாவில் கேட்க இருக்கிறது. இதனை //”இந்தத் தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவோம். ஆனால், அதற்கு காலஅவகாசம் தேவை”என்று அண்மையில் லண்டனில் சத்தம் ஹவுசில் நிகழ்த்திய உரையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருந்தார்.// ஏற்கனவே கொடுத்த அவகாசத்தின் போது ஏதும் செய்யாத இலங்கை அரசு இப்போது ஏன் மீண்டும் மீண்டும் அவகாசம் கேட்கிறதென்றால் தமிழர்களுக்கான தீர்வை தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு ஒன்றுமில்லாமல் ஆக்குவதும். அதே நேரத்தில் இனப்படுகொலை தடயங்களை அழித்து இனப்படுகொலையாளர்களை காக்கவும் இந்த கால அவகாசத்தை இலங்கை எடுத்துக்கொள்ளும். மேலும் எவ்வளவு அவகாசம் கொடுத்தாலும் இலங்கை அரசு தமிழர்களுக்கு எந்த தீர்வையும் பெற்றுத்தராது என்பதை தாண்டி இலங்கை அரசின் கீழ் தமிழர்களுக்கு ஒருநாளும் தீர்வே கிடைக்காது என்பது தான் வரலாற்று உண்மை.

 

maithri_

இதையே தான் சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகிறது. உதாரணத்திற்கு ”இலங்கையில் எந்தவித விசாரணை ஆணையமும் அமைக்கப்படமாட்டாது என்று இலங்கை அதிபர் சிறிசேனா திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.” ”இலங்கை இராணுவ வீரர்கள் மீது எந்தவொரு விசாரணையும் வர நாங்கள் ஒருபோது அனுமதிக்கமாட்டோம் மேலும் வெளிநாட்டு நீதிபதியையோ அல்லது கலப்பு விசாரணையையோ எங்கள் அரசாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளது இலங்கை பிரதமர் இரணில் விக்ரமசிங்கே” ”யுத்தக்குற்றங்கள் தொடர்பாக விசாரணை எதுவும் தேவையில்லை என மிகத் தெளிவாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் தொடர்பான அந்த அலுவலகத்துக்குப் பொறுப்பாக இருக்க கூடிய முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயகக்க குமாரதுங்க, தெளிவாகவே சொல்லிவிட்டார்” மேலும் ”தமிழ் பெண்களை இலங்கை இராணுவம் பாலியல் துன்புறுத்தல் செய்வது இன்றும் தொடர்கிறதென்று இலங்கையின் முன்னால் ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்கவே சில நாட்களுக்கு முன் சொல்லியிருந்தென்றால்” உண்மை நிலவரத்தை இதற்கு மேல் நாம் தனியாக தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன? ஆகவே தமிழர்கள் தங்களது பூர்விக இடத்திலேயே பாதுகாப்பற்ற ஒரு மோசமான சூழலில் இருக்கும் போது இலங்கை அரசுக்கு மேலும் கால நீடிப்பு கொடுப்பது என்பதோ அல்லது தொடர்ந்து கொலை செய்துகொண்டே இருக்கும் சிங்கள பேரினவாதத்தின் கீழாக தமிழர்களை இருக்க வைப்பது என்பதோ எஞ்சியிருக்கிற தமிழர்களையும் கொலைசெய்வதற்கு சமம்.ஆகவே ஐநா அவை தமிழர்களுக்கு என்ன தேவை என்பதை அறியும் விதமாக பொதுவாக்கெடுப்பையும், இனப்படுகொலை குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை அரசை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தவுமே சிறந்த செயலாக அமையும். ஆனால் இதை செய்யுமா வல்லரசுகளின் ஐநா? என்பதே நம்முன் இருக்கிற கேள்வி…..

 

கொண்டல்சாமி


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top