திமுக,ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டாக சேர்ந்து சபாநாயகர் மைக் இருக்கை உடைப்பு

இன்னும் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கவில்லை. எதிர்கட்சியினர்

ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். ஒரு மணி வரை சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

ension-in-assembly-premises-the-police-task-force-deployed_SECVPF

 

கடும் எதிர்பார்ப்புக்கு இடையில் சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று கூடியது.  சட்டசபை தொடங்கியதும் அவையில்  கடும் அமளி ஏற்பட்டது. அவை கூடியதும் சபாநாயகர், சபை கூடியதற்கான காரணங்களை தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஓபிஎஸ் அணியின் கொறடா செம்மலை பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

16807237_1176917445759257_3067194789241825490_n

திமுக, ஓ. பன்னீர்ச் செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்கள், அதிமுக, மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் கடும் அமளி ஏற்பட்டது.சட்டசபையில் ஓபிஎஸ் அணியினர் திமுக வோடு சேர்ந்து  ரகசிய ஒட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று முழக்கம் எழுப்பினர். ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே உண்மையான ஜனநாயகத்திற்கு வழி வகுக்கும் சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேசினார். எம்.எல்.ஏக்கள் தொகுதிக்கு சென்று வந்த பிறகே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார். தொகுதி மக்களை சந்திக்க எம்.எல்.ஏக்களை அனுமதிக்கவேண்டும் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ நட்ராஜ் கோரினார். இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது – திமுக உறுப்பினர்கள் அனைவரும் கோரிக்கை  வைத்தனர்.

5

15 நாட்கள் அவகாசம் இருக்கும் நிலையில் ஒரே நாள் இடைவேளையில் வாக்கெடுப்பு நடத்த அவசியம் என்ன? என திமுக சட்டமன்ற துணை தலைவர் துரைமுருகன் கூறினார்.

 

என்னுடைய முடிவை பேரவை உறுப்பினர்கள் ஆட்சேபிக்க முடியாது.வாக்கெடுப்பு முறை என்பது எனது தனிப்பட்ட முடிவு யாரும் தலையிட முடியாது என சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

 

ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் திமுக, ஓபிஎஸ் அதிமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதற்கு எதிராக சசிகலா தரப்பு எம்.எல்.ஏக்கள் அமைதியான முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெறும் முழக்கங்களை மட்டும்  எழுப்பினர். இதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. உறுப்பினர்களைத் தொடர்ந்து அமைதி காக்க வேண்டும் என சபாநாயகர் வலியுறுத்தினார். ஆனாலும் அமளி நீடித்தது. இந்த அமளிக்கு இடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

 

சபை தொடங்கி ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும்  நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்காமல் அமளி நீடித்தது. எதிர்கட்சியினர் ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். திமுக உறுப்பினர் பூங்கோதை மேஜை மீது ஏறி  நின்று வாக்குவாதம் செய்தார். உறுப்பினர்கள்  பேப்பரை கிழித்தும் தூக்கி எறிந்தும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். சபாநாயர் இருக்கை, மைக் உடைக்கப்பட்டது. சட்டப்பேரவை 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top