எடப்பாடியாருக்கு எதிராக பொன்.ராதாகிருஷ்ணன் புலம்பல்; பன்னீரை இயக்குவது ‘பாஜக’ அம்பலம்!

 pon

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நாளை வரே நீடிப்பதே கேள்விக் குறிதான் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். பன்னீர் செல்வத்திற்கு பின்னால் நின்று இயக்குவது பாஜக தான் என்று பலர் சொல்லிவந்தாலும் அப்படி வெளிப்படையாக யாரும் பேட்டி கொடுக்கவில்லை

 

நேற்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி பாஜக வின் ஆதங்கமாகவும் தங்களுடைய ஆள் ஆட்சி அமைக்க முடியவில்லையே என்கிற வேதனையை வெளிப்படுத்துவதாக இருந்தது

தமிழகத்தில் மீண்டும் குடும்ப ஆட்சி வேண்டாம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நீடிப்பாரே என்பது கேள்விக்குறிதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 10 மாதங்களில் மட்டும் மூன்று முதல்வர்கள் மாறியுள்ளனர். கடந்த நாட்களுக்கு மேலாக நடந்து வந்த முதல்வர் பதவிக்கான போட்டி நேற்று முடிவுக்கு வந்தது.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார். அவரது தலைமையில் 31 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

 

நாளை கூடவுள்ள சட்டசபைக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

 

 

அப்போது அவர் கூறியதாவது, கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்றுவந்த திராவிடக் கட்சிகளின் சகாப்தம் முடிவடைந்தது. அதிமுக ஆட்சியில் காவல்துறையில் சுதந்திரமாக செயல்படவில்லை.

 

முதல்வராக பதவியேற்றுள்ள எடப்படி பழனிச்சாமியை சுதந்திரமாக செயல்படமுடியாது . மேலும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நாளை வரே நீடிப்பதே கேள்விக் குறிதான்.

 

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான அனைத்து பணிகளையும் பாஜக மேற்கொள்ளும். தமிழகத்தில் குடும்ப ஆட்சியை மீண்டும் கொண்டு வரவேண்டாம். இவ்வாறு மத்திய அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன் தெரிவித்தார்.

சசிகலா குடும்பத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மத்திய அமைச்சரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top