மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை இணையதளத்தில் இருந்து மோடி படத்தை அகற்ற தேர்தல் கமிஷன் உத்தரவு

modi

 

மத்திய அரசின் இணையதளத்தில் பிரதமர் மோடி மற்றும் வெங்கையா நாயுடு புகைப்படங்களை உடனடியாக அகற்றுமாறு தேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டது.

மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகம் சார்பில், ‘பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் இணைய தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி வெங்கையா நாயுடு ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தன. உத்தரபிரதேசத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில், இது தேர்தல் விதிமுறையை மீறிய செயல் என்று தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் வந்தன.

இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் வெங்கையா நாயுடு புகைப்படங்களை உடனடியாக அகற்றுமாறு மத்திய மந்திரிசபை செயலாளர் பி.கே.சின்காவுக்கு தேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டது.

அதில், ‘தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன், இந்த படங்களை அகற்றாதது ஏன்? வேறு அமைச்சகங்களின் இணையதளங்களிலும் இத்தகைய படங்கள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top