பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும்;பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

mp
சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் டிவிட்டரில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவின் பாதுகாப்பு காரணங்களுக்காக தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும். சசிகலாவின் வழக்கறிஞர்கள் 2 நாட்களில் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானாலும் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை இறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலர் வி.கே. சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் புதன்கிழமை மாலை சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top