முதல் கட்ட தேர்தல்: உத்தரபிரதேசத்தில் 73 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு துவங்கியது

 

_Polling-underway-

 

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் இன்று முதல் கட்டமாக 73 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று பெருகிறது.

 

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச சட்டசபையில் 403 இடங்கள் உள்ளன. அங்கு இன்று முதல் அடுத்த மாதம் 8–ந் தேதிவரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி அரசை வீழ்த்தி விட்டு, ஆட்சியை கைப்பற்றியே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு பாரதீய ஜனதா களம் இறங்கி இருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியும் மல்லுக்கட்டுகிறது. இவர்களுக்கு மத்தியில் ஆளும் சமாஜ்வாடி கட்சி–காங்கிரஸ் கட்சி கூட்டணியும் போராடி வருகிறது.

 

முதல் கட்டமாக 15 மாவட்டங்களில் உள்ள 73 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடைமையை நிறைவேற்றி வருகின்றனர். கடும் குளிர் நிலவிய போதிலும், மக்கள்  வாக்களிக்க வந்ததை காண முடிந்தது. இந்த தொகுதிகள் இன ரீதியில் பதற்றமானவை  என்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  2 கோடியே 59 லட்சம் வாக்காளர்கள் தங்களுடைய ஜனநாயகக்கடமையை நிறைவேற்ற இருக்கிறார்கள். இவர்கள் 836 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளனர்.

 

இந்த முதல் கட்ட தேர்தல், எந்தக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றப்போகிறது என்பதற்கு அச்சாரமாக அமையும். எனவே இது பாரதீய ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி–காங்கிரஸ் கூட்டணி ஆகிய மூன்று தரப்புக்கும் அமில பரிசோதனையாக அமைந்துள்ளது. ராஷ்ட்ரீய லோக்தள தலைவர் அஜித் சிங்கும் 59 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top