முதல்வர் பன்னீர்செல்வத்துடன் கிரிஜா வைத்திநாதன் ஆலோசனை.

 

panner 123

 

முதல்வர் பன்னீர்செல்வத்துடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழக போலீஸார், ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோரிடையேயும் அதிமுக பொதுச்செயலாளராகவும் சட்டப்பேரவையின் அதிமுக உறுப்பினர்களின் குழு தலைலராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு ஆதரவு அளிப்பதா அல்லது முதல்வராக இருந்து வரும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தருவதா என்ற குழப்பம் காணப்படுகிறது. இதனால், தமிழக நிர்வாகப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கிரின்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் முதல்வர் பன்னீர்செல்வத்தை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருந்தார். இந்த ஆலோசனை சுமார் 20 நிமிடங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.

டிஜிபி டி.கே. ராஜேந்திரனும் முதல்வர் பன்னீர்செல்வத்தைசந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.
சந்திப்பின் போது தமிழக டிஜிபி ராஜேந்திரனுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்பட சில முக்கிய வழக்கு விசாரணைகள் குறித்தும் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதன்பின்னர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியாநாதனும் அங்கே வந்தார். அவருடன், அரசு நிர்வாகச் செயல்பாடுகள், அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி, பன்னீர்செல்வம்செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை டிஜிபியும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top