சசிகலா முதல்வராவதை எதிர்க்கும் மனு; சுப்ரீம்கோர்ட்டில் நாளை விசாரணை

sasikala6-0-09-1486623265

 

சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்பதை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.

 

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் வர உள்ளது. இத்தீர்ப்பு எந்த நேரத்திலும் வரலாம் என கூறப்படுகிறது.

 

ஆனால் இத்தீர்ப்புக்கு முன்னரே முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என சசிகலா துடிக்கிறார். இதற்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து தனி அணியாக விஸ்வரூபமெடுத்துள்ளனர்.

 

இந்த நிலையில் சசிகலா முதல்வராக எதிர்ப்பு தெரிவித்து சட்டப் பஞ்சாயத்து இயக்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top