அதிமுக உட்கட்சி மோதலின் பின்னணியில் பாஜக தலைவர்கள்; சுப்பிரமணியன் சுவாமி

 

subramanian-swamy3

அதிமுக உட்கட்சி மோதலுக்கு சில பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள்தான் காரணம் என அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி அதிரடியாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலரான சசிகலா முதல்வர் பதவிக்கு ஆசை படுகிறார்.  இதற்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கினார்.

இதையடுத்து திமுகவின் பின்னணியில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செயல்படுவதாக சசிகலா குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் திமுகவோ, பாஜக தமக்கு பின்னால் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

அதேநேரத்தில் சசிகலாவுக்கு பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ஆதரவு தெரிவித்து வருகிறார். இதே சுப்பிரமணியன் சுவாமிதான் ஜெயலலிதா, சசிகலா சிறைக்கு செல்ல காரணமான சொத்துகுவிப்பு வழக்கையும் தொடர்ந்தவர்.

தற்போது, தமிழக அரசியல் குழப்பங்களின் பின்னணியில் பாஜக தலைவர்கள் சிலர் இரு அணிகளின் பின்னணியிலும் இருக்கிறார்கள் என புது அணுகுண்டை வீசியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. அதே நேரத்தில் பாஜக தலைமையோ மத்திய அரசோ இந்த விவகாரத்தில் தலையிடவில்லை. பாஜக தலைவர்கள் சொந்த ஆதாயங்களுக்காக தலையிடுகிறார்கள் என கூறியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

அத்துடன் தமிழக ஆளுநர் வித்யாசகர் ராவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடனே நீக்க வேண்டும்; இது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளேன் எனவும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top