கனவிலும் நினைத்துப் பார்க்காத வாழ்க்கை இது: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

siva

 

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த முதல் படம் மெரினா. அந்தப் படம் வெளியாகி 5 வருடங்கள் ஓடோடிவிட்டன. இதையொட்டி ஒரு பதிவை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அதில் அவர் கூறியதாவது:

2012, பிப்ரவரி 3 அன்று என்னை முதல்முதலாகப் பெரிய திரையில் பார்த்த நாள். இந்த 5 வருடங்கள் மகத்தான அனுபவங்கள் கிடைத்தன. எனக்கு ரசிகர்கள் அளித்த வாழ்க்கையை நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. என் சகோதரர்கள், சகோதரிகள், என் படக்குழு உறுப்பினர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு அதிபர்கள், எல்லா நடிகர்களின் ரசிகர்கள், ஊடகங்கள், ரசிகர்கள் என அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.

இந்த வாழ்க்கையைத் தொடங்கிய வைத்த இயக்குநர் பாண்டிராஜுக்கு சிறப்பு நன்றிகள். நான் இன்னும் பல  போகவேண்டும் என்று எனக்குத் தெரியும். இன்னமும் நான் இங்கே கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். எப்போதும் கற்றுக்கொண்டே தான் இருப்பேன். பொழுதுபோக்குள்ள படங்களை அளிக்க எப்போதும் முயற்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top