மொபைல் போனுக்கு இனி ஆதார் எண் அவசியம்.

mobile 34455

 

 

மொபைல் போன் பயன்படுத்துவோரின் அடையாளத்தை சரி பார்த்து உறுதி செய்யும் வகையிலான மேம்பட்ட தொழில்நுட்பத்தை, ஒரு ஆண்டுக்குள் அமல்படுத்தும்படி, மத்திய அரசை, சுப்ரீம் கோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது. இதன்படி, மொபைல் போன் வைத்திருப்போரிடம், ஆதார் எண் கட்டாயமாக கேட்டு பெறப்பட உள்ளது.

மொபைல் போன் பயன்படுத்துவோரின் அடையாளம் சரி பார்க்கப்படாதது குறித்து, அரசு சாரா அமைப்பு ஒன்று, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்தது.இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர், நீதிபதி, என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை பரிசீலித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நாடு முழுவதும், கோடிக்கணக்கானோர், மொபைல் போன், ‘பிரி பெய்டு’ சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் அடையாளங்களை சரி பார்த்து உறுதி செய்யும் பணிகளை, ஒரு ஆண்டுக்குள்  முடிக்க வேண்டும்.

மொபைல் போன் பயன்படுத்துவோரின் அடையாளத்தை உறுதி செய்வதற்கான நவீன தொழில்நுட்பத்தை மத்திய அரசு உருவாக்கி, ஓராண்டுக்குள் அமல்படுத்த வேண்டும். இதற்காக, மொபைல் போன் வைத்திருப்போரிடம், அவர்களின் ஆதார் எண்களை கேட்டு பெற வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top