ஐபிஎல் போட்டி: கொல்கத்தா, பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை!

iplஐ.பி.எல். போட்டியின் 11–வது ‘லீக்’ ஆட்டம் ஷார்ஜாவில் இன்று நடக்கிறது. இதில் வீராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணி தனது ஹாட்ரிக் வெற்றியினை பதிவு செய்யும் என அதிகம் எதிர்பார்ப்படுகிறது. அந்த அணி இதுவரை பங்குபெற்ற இரண்டு ஆட்டங்களிலும் டெல்லி, மும்பை அணிகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் முதல் போட்டியில் மும்பையை வென்ற கொல்கத்தா அணி, 2–வது ஆட்டத்தில் டெல்லியிடம் தோல்வியை தழுவியது. இந்நிலையில் கொல்கத்தா அணி தனது இரண்டாவது வெற்றியை பெறும் முனைப்ப்டன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top