காவிரி டெல்டா மாவட்டங்களில் 50 ஆண்டு வறட்சி நீடிக்கும்: வைகோ எச்சரிக்கை.

kaveri

மதிமுக சார்பில் தஞ்சாவூர் ரயிலடி, பழைய பேருந்து நிலையம், கீழ ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி உள் ளிட்ட இடங்களில் கட்சிக் கொடி யேற்றிய வைகோ, பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

காவிரி டெல்டா மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. இன்னும் 50 ஆண்டுகளுக்கு மேல் காவிரி டெல்டா வறட்சியின் பிடியில் இருக்கப்போகிறது. அதற்குக் காரணம், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணை கட்டப்போகிறது என்பதுதான். அணைக்கான மூலப் பொருட்கள் அங்கே குவிக்கப்படு கின்றன. இதை யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைப்பது மட்டுமே டெல்டா மாவட் டங்களைக் காப்பாற்றுவதற்கான தீர்வாக இருக்கும்.

காவிரி நீர் வளத்தால் அட்சய பாத்திரமாக இருந்த தஞ்சை, இன்று பிச்சைப் பாத்திரமாக மாறி வருகிறது. இதற்கிடையில், கேரள அரசு பெரியாறு அணையின் குறுக்கேயும், ஆந்திர அரசு பாலாற்றின் குறுக் கேயும் அணை கட்ட முயற்சிக்கின்றன.

இந்நிலையில், நிலத்தடி நீர்மட் டத்தை வெகுவாகக் குறைக்கும் சீமைக் கருவேல மரம் பிரச்சினை பெரிதாக வெடித்துள்ளது. அவற்றை அகற்ற அரசால் மட்டும் முடியாது. மக்கள், ஓர் இயக்கமாக மாறி அவற்றை அகற்ற வேண்டும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top