ஊட்டியில் இருந்த கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏன் திடீர் டெல்லி பயணம்?

_Governor-

 

கோவையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் நேற்று காலை 10.15 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து தனது மனைவியுடன் விமானம் மூலம் கோவை வந்தார். அவரை கலெக்டர் ஹரிகரன், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.அமல்ராஜ் மற்றும் அதிகாரிகள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் கோவையில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் தனது மனைவியுடன் பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்ததும் அவர் தனது மனைவியுடன் கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றார்.


ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் ஹெலிகாப்டர் பிற்பகல் 1.35 மணிக்கு தரை இறங்கியது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர் கவர்னர் வித்யாசாகர் ராவ் கார் மூலம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவன் மாளிகைக்கு சென்றார். ராஜ்பவனில் போலீசார் அணிவகுத்து கவர்னருக்கு மரியாதை செலுத்தினர். கவர்னர் ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா, பைக்காரா, தோடர் இன ஆதிவாசி மக்கள் வசிக்கும் முத்தநாடு மந்து, முதுமலை புலிகள் காப்பகம் ஆகிய இடங்களுக்கு செல்வதாக இருந்தது.


இந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு நேற்று மாலை வித்யாசாகர் ராவ் திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

இதற்காக நேற்று மாலை 5 மணிக்கு தனது மனைவியுடன் ஊட்டியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை வந்த அவர், அங்கிருந்து மாலை 6.45 மணிக்கு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகரின் மகன் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அவர் டெல்லி சென்றதாக தகவல் வெளியாகி இருந்தாலும் அது உண்மை இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.வி கே சசிகலா முதல்வராகபொறுப்பேற்க இருப்பதால் மத்தியில் ஆளும் பாஜக அரசு இருப்பு கொள்ளமுடோயாமல் கவனரை அழைத்து பேச இருக்கிறது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top