போயஸ் கார்டனில் சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆலோசனை

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எண்ணூர் கடலில் எண்ணெய் படலம் அகற்றும் பணியை பார்வையிட்டதும் நேராக கோட்டைக்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் திடீரென்று காலை 11.45 மணிக்கு போயஸ் கார்டன் சென்றார். அங்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார்.

அவருடன் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, திண்டுக்கல் சீனிவாசன் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

30 நிமிடத்திற்கு மேலாக ஆலோசனை நீடித்தது. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top