சென்னையில்; ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் ராக்கெட் குண்டு கண்டெடுப்பு.

 

raket

 

சென்னை அயனாவரத்தில், உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ராக்கெட் குண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில், சன்னி வில்லா என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 400 வீடுகள் உள்ளன. 60 சிசிடிவி கேமராக்கள் மூலம் இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வருவோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் குடியிருப்பு முன்புறம் உள்ள பூங்காவில் நேற்று மாலை சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது, வித்தியாசமான இரும்பு பொருள் ஒன்று கிடைத்து. அதனை அவர்கள் குடியிருப்பு வளாக பாதுகாவலர்களிடம் கொடுத்துள்ளனர். 

இதனைத்தொடர்ந்து குடியிருப்பு காவலர்கள் அந்த இரும்பு பொருளை அயனாவரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த இரும்பு பொருள் ராக்கெட் குண்டு என்றும், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதம் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 

இச்சம்பவம் தொடர்பாக போலீசார்,வழக்கு பதிவு செய்து  ராக்கெட் குண்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்தது எப்படி என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top