அவனியாபுரத்தில் 5-ந் தேதி நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடுகள் தீவிரம்

மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் வருகிற 5-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள குருநாதன் கோவில் முன்பு உள்ள திடலில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் இங்கு முகூர்த்தக்கால் நடப்பட்டு வாடிவாசல், கேலரி, தடுப்புகள் அமைக்கும் பணி தொடங்கியது. இன்றும் 3 நாளாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

 ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கும், காளைகளுக்கும் பல கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது. தகுதியான காளைகள் மட்டும் ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்படும் என்றும், இதற்காக அவனியாபுரம் கால்நடை மருத்துவமனையில் காளைகளுக்கு பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.அதன்படி கால்நடை மருத்துவர் முத்துராம் தலைமையில் மருத்துவ குழுவினர் கடந்த 3 நாட்களாக மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். போட்டிகளில் பங்கேற்க தகுதியாக உள்ள காளைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழை காளைகள் உரிமையாளர்கள், விழா நிர்வாகிகள், ஜல்லிக்கட்டு நடத்தும் அதிகாரியிடம் காண்பித்து பதிவு செய்து வருகிறார்கள். இன்று வரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 200-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதேபோல் மாடுபிடி வீரர்களுக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டு தங்களது பெயரை பதிவு செய்து வருகிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top