இணையதளம் லிங்கை கிளிக் செய்தால் பணம்; 6 லட்சம் பேரிடம் சுமார் ரூ.3,700 கோடி

 

kilic

 

உத்தர பிரதேச, மாநிலம் நொய்டாவில், தனியார் நிறுவனம் ஒன்று ப்ளேஸ் இன்போ சொல்யூசன்ஸ் என்ற, இணையதளகணக்கு ஒன்றை துவக்கி, உறுப்பினராக வருமாறு அழைப்பு விடுத்தார். அதில் வரும் லிங்கை கிளிக் செய்தால், கிளிக்செய்யும் ஒவ்வொரு முறையும் ரூ.5 கிடைக்கும் என்றுஅதில் குறிப்பிடப்பட்டிருந்தது அதை பார்த்த சுமார் 6 லட்சம் பேர்  அதில் இணைந்தனர்.

இதற்காக அவர்கள் ஒவொருவரும் சுமார் ரூ. 5 ஆயிரம் முதல், ரூ.50 ஆயிரம் வரை பணம் செலுத்தியுள்ளனர். இதற்காக தனியாக சர்வர் ஒன்றும் துவக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் அவர்களின் மொபைலுக்கு அனுப்பப்பட்ட லிங்க்கை கிளிக் செய்த போது பணம் செலுத்தியவர்களின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்திற்கு சென்றதே தவிர, பணம் எதுவும் கிடைக்கவில்லை. அவ்வப்போது இணையதள கணக்கின் பெயரையும் மாற்றியுள்ளது

தற்போது இதில் 6 லட்சம் பேரிடம் பணம் பெற்று சுமார் ரூ.3,700 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ,ஏமாந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் அனுபவ் மிட்டல் என்பவரையும், மற்றும் அவருடன் இருந்த எம்.பி.ஏ., பட்டதாரி உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்தனர். நிறுவனத்தில் சோதனை நடத்திய போலீசார், 250 பாஸ்போர்ட்களை பறிமுதல் செய்தனர். ரூ.500 கோடி அளவுக்கு வங்கிப்பணமும் முடக்கப்பட்டுள்ளது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top