தரவரிசை: செரீனா முதலிடம்

மகளிர் ஒற்றையர் டென்னிஸ் தரவரிசையில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

serena
முன்னதாக 2-ஆவது இடத்தில் இருந்த செரீனா, ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பரை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார். கெர்பர் 2-ஆவது இடத்திலும், செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 3-ஆவது இடத்திலும் உள்ளனர்.
ஆடவர் ஒற்றையர் தரவரிசையைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 7 இடங்கள் முன்னேறி 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இறுதிச்சுற்று வரை முன்னேறிய ஸ்பெயினின் ரஃபேல் நடால் 3 இடங்கள் முன்னேறி 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். பிரிட்டனின் ஆன்டி முர்ரே, செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top