தக்காளி- வெண்டைக்காய் விலை திடீர் உயர்வு

சென்னையில் காய்கறி விலை திடீரென உயர்ந்துள்ளது.

வெண்டைக்காய் 1 கிலோ ரூ.50 முதல் ரூ.70 வரை விற்கப்படுகிறது. தக்காளி ரூ.35 முதல் ரூ.40 வரை விலை உயர்ந்து விட்டது.

_Chennai-Tomato-Ladyfinger-price-hF

புடலங்காய் கிலோ ரூ.50-க்கும், பீர்க்கங்காய் கிலோ ரூ.40-க்கும் விற்கப்படுகிறது. தேங்காய் விலையும் உயர்ந்து பெரிய தேங்காய் ரூ.30-க்கும், சிறிய தேங்காய் ரூ.20 முதல் ரூ.25-க்கும் விற்கப்படுகிறது.

கொத்தவரங்காய் கிலோ ரூ.25-க்கும், கோவக்காய் கிலோ ரூ.20-க்கும் விலை அதிகரித்துள்ளது.

இதுபற்றி அயனாவரம் காய்கறி வியாபாரி சாமுவேல் கூறியதாவது:-

பருவ மழை சரிவர பெய்யாததால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் திருவள்ளூர், திருவண்ணாமலை, கும்பகோணம், மணப்பாறை, ஓசூர், கிருஷ்ணகிரி, பெரிய பாளையம் பகுதிகளில் இருந்து வரும் காய்கறி வரத்து குறைந்து விட்டது.

இதனால் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டி உள்ளது.

இதனால் காய்கறி விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்போது பனி பொழிவு உள்ளதால் காய்கறி ஓரளவு வந்து கொண்டு இருக்கிறது.

அடுத்த மாதத்தில் இருந்து காய்கறி விலை இன்னும் உயரும்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top