முதல்வருக்காக அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான தேதி ஒருவாரம் ஒத்திவைப்பு

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கக்கோரி மாணவர்கள் தமிழ்நாடு முழுவதும் ஒருவார காலம் போராட்டம் நடத்தினர். மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்திட தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி அலங்காநல்லூரிலும், பிப்ரவரி 2-ம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என விழாக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டது.

alanganallur-
இதற்கிடையில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் மீதான விசாரணை வருகின்ற 31-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் நடைபெறவிருந்த  ஜல்லிக்கட்டு ஒருவாரம் ஒத்திவைக்கப்படுவதாகவும், முதல்வரை சந்தித்தபின் ஜல்லிக்கட்டுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் விழாக்குழு அறிவித்துள்ளது.

 

மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்திட தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்த கையோடு முதல்வர் அலங்காநல்லூர் சென்றார்.அவசர அவசரமாக தானே தலைமை தாங்கி ஜல்லிகட்டை நடத்துவதாக இருந்தது.ஆனால் ‘’நீங்கள் கொண்டு வந்தது  அவசரச்சட்டம் நாங்கள் கேட்பது நிரந்தரச்சட்டம்’’ ஆகையால் நீங்கள் திருப்பி போய் விடுங்கள் என்று அலங்காநல்லூர் மக்கள் முதல்வரை திருப்பி அனுப்பிவிட்டார்கள். அந்த அவமானத்தை சரிசெய்ய திரும்பவும் அலங்காநல்லூர் வந்து ஜல்லிகட்டை துவங்கிவைக்க நினைக்கிறார் முதல்வர்.  இப்போது தமிழக முதல்வருக்காக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top