ஒரே ஓவரில் வரிசையாக 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றி அசத்திய ஆஸ்திரேலிய வீரர்

ஆஸ்திரேலியாவில் கிளப் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் கோல்டன் பாயிண்ட் கிரிக்கெட் கிளப்- ஈஸ்ட் பலாரட் அணிகள் மோதின.

இதில் ஈஸ்ட் பலாரட் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது கோல்டன் பாயிண்ட் கிரிக்கெட் கிளப் அணியின் 29 வயதான ஆலெட் கோரி 9-வது ஓவரை வீசினார்.

Australian-Club-Cricketer-Picks-Six-Wickets-in-Six_SECVPF

இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் எதிரணி பேட்ஸ்மேன்கள் முதல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்கள். அடுத்த பேட்ஸ்மேன் எல்.பி.டபிள்யூ. மூலம் அவுட் ஆனார்.

அடுத்த மூன்று பேரையும் க்ளீன் போல்டு மூலம் வீழ்த்தினார். இதனால் ஈஸ்ட் பலாரட் அணி 40 ரன்னில் சுருண்டது. ஆலெட் கேரி ஒரே ஓவரில் வரிசையாக 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி கிரிக்கெட் வரலாற்றில் சாதனைப் படைத்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top