ஜல்லிக்கட்டு போராட்டம்: போலீஸ் அத்துமீறி மாணவர்களை அடித்து விரட்டியது

 

jalli

 

ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் கோரியும், பீட்டா அமைப்புக்குத் தடை கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் கூடியிருந்த போராட்டக்காரர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வருகின்றனர்.

சென்னை மெரினாவில் போராட்டக்காரர்களில் பெரும்பாலானோர் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டனர். எஞ்சியுள்ள போராட்டக்காரர்கள் கடலுக்கு அருகே குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராயப்பேட்டையிலும், போலீஸார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். சென்னை அவ்வை சண்முகம் சாலையில் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது.

இதற்கிடையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் கூடியிருக்கும் போராட்டக்காரர்களிடம் போலீஸ் உயரதிகாரிகள் போராட்டத்தைக் கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதேபோல், அலங்காநல்லூரிலும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் போராட்டக்காரர்கள் சமாதானத்தை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

.

ஈரோட்டில் போலீஸார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது அப்பட்டமான  மனித உரிமை மீறல். உலகமே வியக்கும் இப் போராட்டத்தை ஹிப் ஹோப் தமிழா என்பவரும் சேனாதிபதி என்பவரும் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பு வைத்து திசை மாற்றினார்கள்என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top