தமிழக அமைச்சரவைக் கூட்டம் மாலை கூடுகிறது- அவசர சட்டம் குறித்து ஆலோசனை

 

ops

 

தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை கூட்டப்படுகிறது. அவசர சட்டம் தொடர்பாக ஆலோசிக்க அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்படுவதாக கூறப்படுகிறது

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக டெல்லி சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது தமிழக அரசுக்கு அவசர சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்ஹி தெரிவித்தார். இதையடுத்து இன்று காலை டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஓரிரு நாட்களில் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்படும் என்றார். இருப்பினும் ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடைபெறும் நிலைமை உருவாகும் வரை போராட்டம் தொடரும் என்றனர். மேலும் உடனடியாக அவசர சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இன்று மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top