ஊடகங்களின் வெளிச்சம் இல்லாமல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர், நடிகைகள் மவுன போராட்டம்!

 

_pro-jallikkattu-protest-tamil-actors-j

தமிழர்கள் அமைதியாகத்தான் இருப்பார்கள் சீற்றம் கொண்டால் அது ‘அறச்சீற்றம்’ மாகத்தான் இருக்கும் என்று திருநெல்வேலியில் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில், மறைந்த எழுத்தாளர் , சாகித்திய அகடாமி விருது வாங்கிய இலக்கிய விமர்சகர் ‘தி.கா.சி’ அவர்கள் ஒரு கூட்டத்தில் சொன்னதுதான் இப்போது நினைவிற்கு வருகிறது.இந்த மாணவர்களின் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தை பார்கிறபோது!

 

‘அறச்சீற்றம்’ என்பது நமக்கு எதிராக  இருப்பவர்களையும் குற்ற உணர்வுகளுக்கு ஆளாக்குவது,நம் கருத்தின் ஆழத்தை புரியவைப்பது. இதைதான் இந்த மாணவர்கள் செய்து காண்பித்து இருக்கிறார்கள்.சேதாரமே இல்லாமல் எதிர் தரப்பு கருத்துக்களை மாற்றி தம் பக்கம் சேகரித்து விட்டார்கள்.

 

தமிழ்நாட்டில் ஊடகங்கள் இல்லாமல் திரைப்பட  நடிகர், நடிகைகளின் ஆர்பாட்டம் நடைப்பெற்றது உண்டா? இல்லை ஊடகங்களில் விளம்பரமே இல்லாமல் ‘லைவ்’ செய்திகளை நாம்தான் பார்த்தது உண்டா? அது இப்போது நடக்கிறது.  இதுதான் ‘அறச்சீற்றம்’ இதற்கு முன்னாள் எந்த விளம்பரமும் எந்த பகட்டும் நிற்க முடியவில்லை!

 

ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி இளைஞர்களும், மாணவர்களும் நடத்தும் எழுச்சி போராட்டத்தால் தமிழகமே குலுங்கி இருக்கிறது.

 

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி நடிகர்-நடிகைகள் சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம் துவங்கினர். தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் இன்று மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. முன்னணி நடிகர்-நடிகைகள் அமர்வதற்கு மேடையும் அமைக்கப்பட்டு இருந்தது.

 

இப்போராட்டத்துக்கு நடிகர், நடிகைகளை தவிர வேறு யாருமே உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் யாருமே ஒளிப்பதிவு செய்ய வர வேண்டாம் என்று நடிகர் சங்கத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

nassar-

இன்று காலை 8 மணியளவில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், உள்ளிட்டோர் கலந்து கொண்டு அமைதி வழியில் மவுனப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இப்போராட்டத்தில் முன்னணி நடிகர்கள் பலரும் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top