ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும்: போராடும் மாணவர்கள்

 

_protesters-

 

ஜல்லிக்கட்டு நடைபெற்ற நிரந்தர தீர்வு காணும் வரை போரட்டம் தொடரும் என்று போராடும் மாணவர்கள்  தெரிவித்துள்ளார்கள் .

 

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது இதனால் 3–வது ஆண்டாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறாததால் தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் ஆவேசம் அடைந்து போராடி வருகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கான தடையை உடைக்கும் வரை  போராட்டம் தொடரும் என்று அவர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

 

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக நேற்று முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், சென்னை திரும்பாமல் டெல்லியில் இருந்த படியே சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து இன்று காலை டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ பன்னீர் செல்வம், ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். பன்னீர் செல்வம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

 

ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி, ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு, அவசர சட்டம் பிறப்பிக்கப்படும். இது தொடர்பான  சட்ட வரைவு உள்துறை அமைச்சகத்திற்கு வரைவு அனுப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மேற்கொள்வர். மத்திய அரசின் மிருகவதை தடுப்புச்சட்டத்தில் மாநில  அளவில் திருத்தம் கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு ஓரிருநாட்களில் நடைபெறும் என்பதால், பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்”  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

ஆனால், முதல் அமைச்சர்  கோரிக்கையை ஏற்று போராட்டத்தை கைவிட போராடும் மாணவர்கள்  மறுப்பு தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு நிரந்தர தீர்வு காணும்  வரை போராட்டம் தொடரும் என்றும் ஜல்லிக்கட்டுக்கு தடை முழுவதுமாக நீங்கும் வரை போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top