கியூபா- அமெரிக்க உறவில் மாற்றம்; குடியேற்ற கொள்கையில் அதிரடி மாற்றம்

 

fise

கியூபாவுடன் நீடிக்கும் அரை நூற்றாண்டு பகைக்கு அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்ற நாள் முதலாக முற்றுப்புள்ளி வைக்க முயன்று வருகிறார்.

அதன் அடிப்படையில் கியூபாவுக்கு சென்று பிடல் காஸ்ட்ரோவின் தம்பியும், அதிபருமான ரவுல் காஸ்ட்ரோவைச் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பலனாக கியூபாவில் நீண்ட இடைவெளிக்குப் பின் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இதே போல் அமெரிக்காவிலும் கியூபா நாட்டின் தூதரகம் திறக்கப்பட்டது.

தற்போது அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில் கியூபா மீதான 20 ஆண்டு பழமையான குடியேற்ற கொள்கையிலும் அதிபர் ஒபாமா அதிரடி மாற்றம் கொண்டு வந்துள்ளார்.

இதன்மூலம் அமெரிக்க எல்லை வழியாக சட்ட விரோதமாக நுழையும் கியூபா மக்களுக்கு சட்டப்படி குடியுரிமை வழங்கப்பட்ட நடை முறை ரத்தாகிறது. இதனால் அமெரிக்கா, கியூபா இடையிலான உறவு வலுப்பெறும் என நம்பப்படுகிறது.

கியூபாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைபவர்களுக்கு அமெரிக்கா பல சலுகைகளை வழங்கி வந்தது அவர்களுக்கு சட்டப்படியும் குடியுரிமை வழங்கப்பட்டது கியூபாவவை  நேரிடையாக பழிவாங்க முடியாததால் இப்படி செய்து வந்தது இப்போது ஒபாமா கியூபாவோடு நட்புறவு கொள்ள விரும்புகிறார் அதன் அடிப்படையிலே அமெரிக்க கியூபா உறவில் மாற்றம் நிகழ்கிறது ஆகையால்தான் அமெரிக்க கியூபா மக்களுக்கு சட்டப்படி குடியுரிமை வழங்கப்பட்ட நடைமுறை ரத்தாகிறது

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top