6 அரசு அதிகாரிகளை மாவோயிஸ்ட்கள் கடத்திச்சென்றனர் ஆந்திரா – ஒடிசா எல்லையில் பதற்றம்

 

maist

அரசு அதிகாரிகளை மாவோயிஸ்ட்கள் கடத்திச் சென்றிருப்பதாக கூறப்படுகிறது

கடந்த ஆண்டுஆந்திரா – ஒடிசா எல்லையில் உள்ள வனப்பகுதியில் 31 மாவோயிஸ்ட்களை போலீஸார் என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக்கொன்றனர்.

அது குறித்து அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பத்திரிக்கையும் மக்களிடம் அரசு வன்முறையை குறித்து பேசுவதில்லை .இந்த நிலையில் ஆந்திரா – ஒடிசா மாநில எல்லையில் 6 அரசு ஊழியர்களை மாவோயிஸ்ட்கள் கடத்திச் சென்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

.ஒடிசாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக ஆந்திரா-ஒடிசா எல்லையில் இருக்கும் போடங்கா பகுதிக்கு வருவாய் துறை அதிகாரிகள் 6 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை நேற்று காலை மாவோயிஸ்ட்கள்  திடீரென கடத்திச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மாவோயிஸ்ட்களிடம் இருந்து அரசு அதிகாரிகளைப் பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கைகளில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top