ஜி.எஸ்.டி இணையதளத்தில் அனைத்து வணிகர்களும் பெயரை பதிவு செய்யவேண்டும்; வணிகவரி ஆணையர்

 

ecommerce-kjZF--

ஜி.எஸ்.டி இணையதளத்தில் அனைத்து வணிகர்களும் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என சேலம் வணிகவரிக் கோட்ட இணை ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே சீரான முறையில் வரிவிதிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) விரைவில் அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கான இணையதளம் மற்றும் மென்பொருளை உருவாக்கும் பணியை சரக்கு மற்றும் சேவைக் கட்டமைப்பு மூலம் (ஜி.எஸ்.டி.என்.) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் ஜி.எஸ்.டி. தொடர்பாக www.gst.gov.in என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது.

தமிழகத்தில் வரிச் செலுத்துவோர் அடையாள எண் (டின்) பதிவு பெற்ற அனைத்து வணிகர்களும் இந்த இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். 1.1.2017 முதல் இந்தப் பதிவை வணிகர்கள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் பதிவு செய்ய தாற்காலிக ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு வணிகர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் வணிகவரித் துறை இணையதளம் https:ctdtngov.in மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், உதவி மையங்கள் தாற்காலிக ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு பெற்றவுடன் ஜி.எஸ்.டி. இணையதளத்தை உபயோகப்படுத்தி இந்தப் பதிவை பூர்த்தி செய்திட வேண்டும்.
ஜி.எஸ்.டி. பதிவை பூர்த்தி செய்ய https:ctdtngov.in என்ற இணையத்தில் உள்ள உதவிக்கோப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வணிகவரித் துறையின் சார்பில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வரிவிதிப்பு அலுவலகங்களிலும் சிறப்பு உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்து வணிகர்களும் ஜி.எஸ்.டி. இணையதளத்தில் பதிவு பெற்ற இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top