‘கொம்புவச்ச சிங்கம்டா’பாடல் வருமானம்; விவசாயிகளின் குடும்பத்துக்கு கொடுக்க ஜி.வி.பிரகாஷ் முடிவு

 

 

gv_prakash

‘கொம்புவச்ச சிங்கம்டா’ பாடலின் மூலமாக வரும் வருமானத்தை, நலிவடைந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு கொடுக்க ஜி.வி.பிரகாஷ் முடிவு செய்துள்ளார்.

‘அடங்காதே’, ‘4ஜி’, ‘சர்வ தாளமயம்’, ‘சசி இயக்கும் படம்’, ‘ரவிஅரசு இயக்கவுள்ள படம்’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். படப்பிடிப்புகளுக்கு இடையே நண்பர் அருண்ராஜா காமராஜுடன் இணைந்து ‘கொம்புவச்ச சிங்கம்டா’ என்ற பாடலை உருவாக்கியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

விரைவில் இப்பாடலை வெளியிட முடிவு செய்துள்ளார்கள். இதற்கான அதிகாரபூர்வ தேதி விரைவில் வெளியாகவுள்ளது.ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இப்பாடல் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்பாடல் மூலமாக வரும் அனைத்து வருமானத்தையும், நலிவடைந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு அளிக்க ஜி.வி.பிரகாஷ் முடிவு செய்துள்ளார். “’கொம்புவச்ச சிங்கம்டா’ பாடலின் மூலம் வருமானத்தை, நலிவடைந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு முழுமையாக கொடுக்கவுள்ளோம். எனது தரப்பிலிருந்து ஒரு முயற்சி” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

இவருடைய இந்த முயற்சிக்கு,சமூக வலைத்தளத்தில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top