ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கோரி சென்னை மெரினாவில் பிரமாண்ட பேரணி

1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு பேரணி இன்று சென்னை மெரினாவில் பிரமாண்டமாக  நடைப்பெற்றது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கோரி சென்னை மெரினாவில் பிரமாண்ட பேரணி நடைப்பெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படவில்லை.

15894813_1436611839717357_6794563479034786601_n

15873058_1436612073050667_7301285803185556343_n

15894259_1436611986384009_6124891026927629449_n

 

 

இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை மெரினாவில் பிரமாண்ட ஊர்வலம் நடைபெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தமிழகத்தில் இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். சென்னை கலங்கரைவிளக்கத்தில் இருந்து உழைப்பாளர் சிலை வரை இப்போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளைஞர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து கலந்து கொண்டது  மிகவும் சிறப்பாக மக்களை கவர்ந்தது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top