ஜெயலலிதா எதிர்த்த ‘உதய்’ மின் திட்டத்தில் இப்போது தமிழகம் இணைகிறது; 9–ந்தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம்

 

eb

 

கடைசி மூச்சு வரை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்த திட்டம் ‘உதய்’ மின் திட்டம்.மத்திய மோடி அரசு கொண்டுவந்த மக்கள் விரோத பல திட்டங்களில் ஓன்று ‘உதய்’ மின் திட்டம்.இதை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார்,ஆனால்அவர் உடல்நிலை கோளாறு காரணமாக அப்பலோவில் இருந்தபோது இத் திட்டங்களை எல்லாம் தமிழக மந்திரிகளை மிரட்டியோ, வசிகரித்தோ மத்திய அரசு கையெழுத்து வாங்கி விட்டதாக சொல்லப்பட்டது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எதிர்த்த திட்டங்களில் எல்லாம் தமிழக அரசு கையெழுத்து இட்டதாக மத்திய அரசு அறிவித்தது. அதை தொடர்ந்து வருகிற 9–ந்தேதி டெல்லியில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆக இருக்கிறது

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 2015–ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் மாநிலங்களின் மின் வினியோக திறனை மேம்படுத்தவும், மின் உற்பத்தி விலை மற்றும் மின் வினியோக அமைப்புகளின் வட்டி சுமையை குறைக்கவும், மின்வினியோக அமைப்புகளில் நிதி ஒழுக்கம் மற்றும் மேலாண்மையை நிலைநாட்டவும் ‘உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ்’ (‘உதய்’) திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த திட்டத்தின் கீழ் 2015 செப்டம்பர் வரை மாநில மின் வாரியங்களின் மொத்த கடனில், 75 சதவீத அளவை மாநில அரசுகள் ஏற்க வேண்டும், மின் கட்டணத்தை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்க வேண்டும், மின் இழப்பை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று உள்ளன.

இத்திட்டத்தில் இதுவரை நாடு முழுவதும் 20 மாநிலங்கள் இணைந்து இருக்கின்றன. தற்போது 21–வது மாநிலமாக தமிழகம் இதில் இணைகிறது. மத்திய மின்சாரத்துறை மந்திரி பியூஷ் கோயல் முன்னிலையில் தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி டெல்லியில் 9–ந்தேதி ‘உதய்’ மின் திட்டத்தில் இணைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுகிறார்.

மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு இடையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

இந்த தகவலை மத்திய மின்சாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top