நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: முஸ்டாபிஜூர் ரஹ்மானுக்கு ஓய்வு

வங்காள தேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த தொடர் முடிந்த உடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி ஜனவரி 12-ந்தேதி வெலிங்டனிலும், 2-வது போட்டி 20-ந்தேதி கிறிஸ்ட்சர்ச்சிலும் நடக்கிறது.

இதற்கான வங்காள தேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முஸ்டாபிஜூர் ரஹ்மானுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து டெஸ்ட் அணிக்கான வங்காள தேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. முஷ்பிகுர் ரஹிம் (கேப்டன்), 2. தமீம் இக்பால், 3. இம்ருல் கெய்ஸ், 4. மொமினுல் ஹக்யூ, 5. சபீர் ரஹ்மான், 6. மெஹ்முதுல்லா, 7. சாஹிப் அல் ஹசன், 8. மெஹெதி ஹசன், 9. தைஜூல் இஸ்லாம், 10. ருபெல் ஹொசைன், 11. கம்ருல் இஸ்லாம், 12. சவுமியா சர்கார், 13. தஸ்கின் அஹமது, 14. நுருல் ஹசன், 15. சுபாஷிஸ் ராய்.

ஒருநாள் போட்டியின்போது காயம் ஏற்பட்ட விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனும் ஆன முஸ்டாபிஜூர் ரஹிம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டியில் தொடர்ந்து விளையாடும் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், இதுவரை அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடியது கிடையாது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top