ஆக்லாந்து டென்னிஸ்: வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி

நியூசிலாந்தில் ஆக்லாந்து கிளாசிக் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலினா வோஸ்னியாக்கி, ஜெர்மனி வீராங்கனை ஜூலியா ஜார்ஜர்ஸ் மோதினர்.

julia-goerges-knocks-caroline-wozniacki-out-of-asb-classic_secvpf

விறுவிறுப்பாக தொடங்கிய இப்போட்டியின் முதல் செட்டை வோஸ்னியாக்கி கைப்பற்றி அசத்தினார். அதனால், அவருக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கருதினர். இரண்டாவது செட்டிலும் 3 புள்ளிகள் வரை அவர் முன்னிலை வகித்தார். அதன்பின்னர், அவரது சர்வீசை முறியடித்து முன்னேறிய ஜூலியா அந்த செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். அதே வேகத்தில் மூன்றாவது செட்டையும் 6-4 என வசமாக்கினார்.

இதனால் 3-1 என வெற்றி பெற்ற ஜூலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றார். வெற்றி வாய்ப்பை வீணடித்த வோஸ்னியாக்கி போட்டியில் இருந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

இப்போட்டியில் ஏற்கனவே முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்சும் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top