14-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது: அரசு ரூ.50 லட்சம் மானியம்

 

cinima

14-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, சென்னையில் இன்று மாலை தொடங்குகிறது. தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் மானியத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று விழாக் குழுவிடம் வழங்கினார்.

இந்தோ சினி அப்ரிசியேஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திரைப்பட விழாவுக்கான தொடக்க விழா இன்று மாலை 6.30 மணிக்கு சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ளது. திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். சென்னையிலுள்ள ஐநாக்ஸ் மால், கேசினோ, ரஷ்ய கலாச்சார மையம், பெலாஸோ, ஆர்.கே.வி. ஆகிய திரையரங்குகளில் படங்கள் திரையிடப்பட உள்ளன.

எட்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், இன்று முதல் தினமும் ஐந்து காட்சிகள் திரையிடப்பட உள்ளன. 45 நாடுகளைச் சேர்ந்த 150 படங்கள் இதில் இடம்பெறும். சிறந்த தமிழ்ப் படங்களுக்கான பிரிவில் 12 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அடிமைப்பெண்’ ஆகிய படங்கள் இந்த விழாவில் திரையிடப்படுகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top