மதுரையில் கல்லூரி மாணவிகள் போராட்டம்

மதுரை அம்பிகா மகளிர் கல்லூரியில் கம்பியூட்டர்  சயின்ஸ் இரண்டாம்ஆ ண்டு படித்து வரும் ஹார்விபட்டியைச் சேர்ந்த சுதா என்கிற மாணவி கல்லூரி வளாகத்தினுள் இருக்கும்போது கட்டுமான பணிக்காக 3ம் தளத்தில் வைக்கப்பட்டிருந்த கல் ஒன்று தவறி மாணவி மீது விழுந்தது .  இதில் மாணவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அம்மாணவியை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்திடம் அணைத்து மனைவிகளும்  கேட்கவே நிர்வாகம் மறுத்துவிட்டது. பின்னர் மாணவிகள் அங்கே இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின்  உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்போது நிர்வாகம் தலையிட்டு  அப்போலோவில் சேர்த்தது.

அந்த பெண்ணினுடைய தந்தையை மிரட்டி இந்த சம்பவம் குறித்து வெளியே சொல்லக்கூடாது என்றும் சுதாவினுடைய தவறான செய்கைகளால் தான் விபத்து நடந்தது என்றும் எழுதி கொடுக்க சொன்னதற்கு அவர் மறுத்துவிட்டார். தலையில் அடிபட்டதில் மாணவி சுதா சுயநிலைவை இழந்ததுடன் இனிமேல் அவரின் வலதுபக்கம் முழுவதும் செயல்படாது எனவும் கூறிவிட்டனர்.

மேலும் இனிமேல் நினைவு திரும்பாது என்றும் அப்படியே திரும்பினாலும் வாய் பேச முடியாது என்றும் இந்த சூழ்நிலையில் மருத்துவமனையில் இருக்கும் மாணவியின் மருத்துவச் செலவினை  கல்லூரி நிர்வாகம் ஏற்க  மறுத்துவிட்டது.  அவரின் மருத்துவச் செலவை ஏற்க வேண்டும் என்று நேற்று (2-1-17) கல்லூரி மாணவிகள் போராடியதற்கு , நாங்கள் பணம் கட்டிவிட்டோம் எனப் பொய்த் தகவலைச் சொல்லியும் அவர்களை மிரட்டியும் போராட்டத்தினைக் கலைத்துவிட்டனர்.

8b1eb2f5-0403-45a0-ab7a-d209d14c743e

56

58

59

60

இந்த தகவலைக் கேள்விப்பட்டு மே17 இயக்கம், விசிக, cpi, cpm ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த நபர்கள் கல்லூரியின் உள்ளே சென்று சம்பவம் நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டனர்.

பின்னர் மருத்துவச் செலவு குறித்து பேசவே நிர்வாகம் தரமுடியாது என மறுத்துவிட்டது.

அம்பிகா மகளிர் கல்லூரியின் மீது இப்படியான குற்றச்சாட்டுகள் வந்த வண்ணமே உள்ளன.

இன்று (3-1-17)காலை கல்லூரி வாசலில் மேற்கண்ட அமைப்புகளைச் சேர்ந்த நபர்கள் திரளவே மாணவிகள் வகுப்பறைகளை புறக்கணித்துவிட்டு  கல்லூரி வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

.போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை கல்லூரி நிர்வாகம் தனிப்பட்ட முறையில் மிரட்டியும் மாணவிகள் பின்வாங்கவில்லை.போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை பேராசிரியர்கள்                ஜெயமேரி, விஜி,  ரமா ஆகியோர் மாணவிகளை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினர்.மாணவிகளுக்கு ஆதரவாக நின்ற ஆசிரியர் நிர்மலா பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்தச் சூழ்நிலையில் பாதிக்கப்பட் மாணவி சுதாவினுடைய மருத்துவச் செலவை ஏற்க வழியுறுத்தியும் அவருக்கு வாழ் நாள் இழப்பீடாக ரூபாய் 15 லட்சம் கொடுக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையோடும் தொடங்கப்பட்ட போராட்டம் வீரியமடையவே நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மாணவிக்கான மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்வதாகவும் ரூபாய் 8லட்சம் இழப்பீடு தருவதாகவும் ஒப்புக் கொண்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top