நேபாளத்துடன் முதல் முறையாக சீனா ராணுவம் கூட்டுப் பயிற்சி தொடங்க உள்ளது.

 

 

nipal-china

சீனா மற்றும் நேபாளம் நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி தொடக்கத்தில் இணைந்து கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ள உள்ளனர்.

 

இது தொடர்பாக சீன பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் யங்க் யுஜூன் கூறுகையில், சீனா மற்றும் நேபாளம் தங்களது போர் பயிற்சி தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும், என்று தெரிவித்தார்.

 

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த ராணுவ பயிற்சி நடைபெறும் என்றும், நேபாள ராணுவ வீரர்கள் சர்வதேச குழுக்களில் செயல்படுது தொடர்பாக பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

china-army

நேபாளம் ஏற்கனவே இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளது. தற்போது முதல் முறையாக சீனாவுடன் பயிற்சியை மேற்கொள்கிறது.

 

இந்த கூட்டுப் பயிற்சி,  தனி நாடு கேட்கும் திபெத்தியர்களுக்கு அச்சம் தரவும் இந்தியாவுக்கு நெருக்கடி தரவும் அமையும். இந்தியாவிற்கு வடக்கே காஷ்மீரிலும் தெற்கே இலங்கையிலும் இப்போது நேபாளத்திலும் சீனா இந்தியாவை நெருங்கியே இருக்கிறது.

 

இந்தியாவின் வெளியுறவு கொள்கை தோல்விக்கு இது சிறந்த உதாரணம். இலங்கையில் விடுதலை புலிகளை அழிக்கவும் தமிழர்களை இனப்படுகொலை செய்யவும் இலங்கை அரசோடு கை கோர்த்த இந்தியா, 2009 க்கு பிறகு குறிப்பாக இலங்கையிடம் நெருக்கம் காண்பித்த பின் இலங்கையின் சதி வலையில் இந்தியா சிக்கிக் கொண்டது.இந்தியா தம்மை சுற்றியுள்ள எந்த நாட்டோடும் நட்புறவு வைத்துக்கொள்ள வில்லை ஆனால் இந்தியாவை சுற்றி உள்ள எல்லா நாட்டோடும் இலங்கை நட்புறவு வைத்துள்ளது.

 

ஏற்கனவே இந்தியாவின் தெற்கேயுள்ள இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இப்போது வடக்கேயுள்ள நேபாளத்தில் கால் வைக்க முயல்கிறது. இது இந்தியாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top