இன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் எஸ்பிஐ வங்கி கிளையில் பயங்கர தீவிபத்து!

 

sbi

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவன் எதிரே உள்ள எஸ்பிஐ வங்கி கட்டடத்தின் 4வது தளத்தில் இன்று காலை திடீரென தீப்பற்றிக் கொண்டது. உடனே இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து 3 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிபத்து ஏற்பட்ட அறையில் இருந்து ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top