ரிசர்வ் வங்கியின் அனுமதி கிடைத்த 3 மணி நேர இடைவெளியில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மர்மம்?

 

modi_pti_380

ரூபாய் 500, 1000 நோட்டுகள் மதிப்பிழப்பு குறித்து மோடி நாட்டு மக்களுக்கு அறிவிப்பதற்கு 3 மணி நேரத்துக்கு முன்புதான், இந்த நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது குறித்த தகவல் கசிந்துள்ளது

நவம்பர் 8ம் தேதி இரவு 8 மணியளவில், பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி, உயர் மதிப்புள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பு வெளியாக 3 மணி நேரத்துக்கு முன்புதான், இந்த நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த தகவல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் மூலம் தெரிய வந்துள்ளது. அதே சமயம், இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் குழுவில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பதற்கான பதில் கிடைக்கப் பெறவில்லை.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top