மோடிக்கு தூக்கு கயிறு அனுப்பும் போராட்டம்; கோவை.ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று நடந்தது

tha-pe-thi-ka

 

பிரதமர் மோடி  கடந்த நவம்பர் 8–ம் தேதி கறுப்பு பணம், மற்றும் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையாக நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு அதிரடியாக தடை விதித்தார்.

அதை தொடர்ந்து மக்கள் தினம் தோறும் ATM வாசலிலே பணம் எடுக்க காத்துக்  கிடந்தனர். பல ATM பணம் இல்லாமல் இருந்தது. பணம் இருக்கும் ATM ல் குறைந்தது இரண்டு மணி நேரம் காத்துக்கிடக்க வேண்டியதிருந்தது. மோடியின் இந்த நடவடிக்கையால்  இந்தியாவில் 80 க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டனர். பிரதமர் மோடியோ எந்த கவலையும் இல்லாமல் இதனால் ஏற்படும் விளைவுகள் 50 நாட்களில் சீரடைந்து விடும். நாட்டிற்காக சில சிரமங்களை மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டும்” என கூறியிருந்தார்.மேலும்

நவம்பர் 13-ம் தேதி, கோவாவில் கிரீன்பீல்டு விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசும் போது

“டிசம்பர் 30-ம் தேதி வரை எனக்கு அவகாசம் கொடுங்கள். அதன் பிறகும் எனது நடவடிக்கைகளில் ஏதேனும் தவறு இருந்தால், நாட்டிற்காக எந்த தண்டனையையும் அனுபவிக்கத் தயாராக இருக்கிறேன். என்னை நெருப்பில் போட்டு எரித்தாலும் தாங்கிக் கொள்ளத் தயார்.நாட்டிற்காக நான் என் உயிரை விடவும் தயாராக உள்ளேன்.” என்றார்.

பாஜக கட்சியை தவிர நாட்டில் உள்ள அணைத்து கட்சிகளும் ஓன்று சேர்ந்து பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்த போதும், மோடி செவிசாய்க்க வில்லை.50 நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள் சரியாகி விடும் இல்லை என்றால் நான் தூக்கு போட்டுக்கொள்கிறேன் என்று மேலும் சவால் விட்டார்

ஆனால், 50 நாட்கள் கடந்த பின்னரும் 90 சதவீத ஏடிஎம்கள் மூடிக்கிடக்கின்றன,திறந்துள்ள 10 சதவீத ஏடிஎம்களிலும் பணம் இல்லாமல் மக்கள்  பிச்சைக்காரர்கள் போல சாலையில் நிற்கிறார்கள்,உழைத்த பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் வேதனையோடு வீடு திரும்புகிறார்கள்.

tha-pe-2

இப்படி நிற்க வைத்து மக்களுக்கு மீண்டும் மீண்டும் வேதனை கொடுத்த பிரதமர் மோடியை கண்டிக்கும் விதமாக இந்தியாவிலே மிகவும் துணிச்சலாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் இன்று ஒரு போராட்டத்தை அறிவித்து நடத்தி இருக்கிறார்கள்

“மக்கள் விரோத மோடியே உண்மையிலேயே மானஸ்தனாக இருந்தால்

கொடுத்த வாக்கை காப்பாற்ற தூக்கில் தொங்க வேண்டும்’’ என்று கூறி  அதை வலியுறுத்தும் விதமாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில்

பொதுச் செயலாளர் கோவை.ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில்

மோடிக்கு தூக்கு கயிறு அனுப்பும் போராட்டம் இன்று கோவையில் நடைபெற்றது.

ஏராளமான இளைஞர்கள் பங்கு கொண்ட இந்த போராட்டம், சமூக வலைத்தளங்களில் வைரலாக போய்க்கொண்டு இருக்கிறது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top